நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : டி.கொசப்பாளையம் கிராமத்தில் வசிக்கும் 22 பேருக்கு மனைப்பட்டா வழங்க கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அப்பகுதி மக்கள் அளித்த மனுவில்; காணை ஒன்றியம் திருக்குணம் ஊராட்சி, டி.கொசப்பாளையம் கிராமத்தில், செடிகாடு பகுதியில் 22 குடும்பத்தினர், கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறோம். சிலருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.
நிலம் புறம்போக்கு என வருவாய்த்துறையும், நீர்நிலை இல்லை என பொதுப்பணித்துறையும் தகவல் தெரிவித்துள்ளது.
இதனால் அப்பகுதியை ஆய்வு செய்து இலவச பட்டா வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.