/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கோவிந்தசாமி சிலை வைக்க கல்லுாரி முதல்வருக்கு கோரிக்கை
/
கோவிந்தசாமி சிலை வைக்க கல்லுாரி முதல்வருக்கு கோரிக்கை
கோவிந்தசாமி சிலை வைக்க கல்லுாரி முதல்வருக்கு கோரிக்கை
கோவிந்தசாமி சிலை வைக்க கல்லுாரி முதல்வருக்கு கோரிக்கை
ADDED : ஜன 25, 2024 11:56 PM

திண்டிவனம் : திண்டிவனம் அரசு கல்லுாரியில் மூடி வைக்கப்பட்டுள்ள கோவிந்தசாமி சிலையை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பா.ம.க., எம்.எல்.ஏ., கோரிக்கை வைத்துள்ளார்.
திண்டிவனம் கோவிந்சாமி அரசு கலைக் கல்லுாரியில், புதுமைப்பெண் திட்டத்தில் பயனடையும் கல்லுாரி மாணவிகளுக்கு முதல்வரின் வாழ்த்து மடல் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில் அமைச்சர் மஸ்தான், மயிலம் பா.ம.க., எம்.எல்.ஏ., சிவக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
சிவக்குமார் எம்.எல்.ஏ., பேசுகையில், 'கோவிந்தசாமி பெயருடைய இந்த கல்லுாரியில், அவருடைய சிலை கல்லுாரி முதல்வர் அலுவலகத்தில் நீண்ட நாட்களாக மூடி வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை திறந்து வைப்பதற்கு அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.