/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சேதமான பாலத்தை அகற்றிவிட்டு சர்வீஸ் சாலை அமைக்க கோரிக்கை
/
சேதமான பாலத்தை அகற்றிவிட்டு சர்வீஸ் சாலை அமைக்க கோரிக்கை
சேதமான பாலத்தை அகற்றிவிட்டு சர்வீஸ் சாலை அமைக்க கோரிக்கை
சேதமான பாலத்தை அகற்றிவிட்டு சர்வீஸ் சாலை அமைக்க கோரிக்கை
ADDED : ஜன 07, 2025 06:31 AM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் பழைய கும்பகோணம் சாலையில் வராக ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர் காலத்திய பாலம் இருந்தது. 2008 ல் 4 வழிச்சாலை அமைக்கப்பட்ட பிறகு இந்த வழியை விபத்து நேரங்களில் மாற்று வழியாகவும், பாதசாரிகள், பைக்கில் செல்பவர்கள் பயன்படுத்தி வந்தனர்.
கடந்த மாதம் பெஞ்சால் புயல் காரணமாக பெய்த மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இந்த பழைய பாலம் சேதமடைந்து ஒரு பகுதி தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டது.
பாலம் துண்டிக்கப்பட்ட பிறகு இரவு நேரங்களில் வழி தெரியாமல் வந்து இந்த பள்ளத்தில் இது வரை 5 பேர் விழுந்து காயமடைந்துள்ளனர் .
பாலம் துண்டிக்கப்பட்டதால் இந்த வழியை பயன்படுத்தாத இரு சக்கர வாகன ஓட்டிகள் திருச்சி-சென்னை சாலையில் பயணிக்காமல், சென்னை திருச்சிபைபாஸ் சாலையில் எதிர் திசையில் ஆபத்தை உணராமல் விக்கிரவாண்டிக்கு பயணம் செய்கின்றனர் . இதனால் விபத்து ஏற்பட்டு உயிர் பலி ஏற்படும் நிலை உள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட நகாய் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் நலன் கருதி பழுதடைந்த பாலத்தை அகற்றி அப்பகுதியில் தரைப்பாலம் அமைத்து சர்வீஸ் சாலையாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

