/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பள்ளி சுற்றுச்சுவர் சேதம் சீரமைக்க கோரிக்கை
/
பள்ளி சுற்றுச்சுவர் சேதம் சீரமைக்க கோரிக்கை
ADDED : ஜூன் 23, 2025 04:56 AM

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே பெஞ்சல் புயலால் சேதமடைந்த பள்ளியின் சுற்றுச்சுவரை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விக்கிரவாண்டி அடுத்த கொட்டியாம்பூண்டி ஊராட்சியில் நுாற்றாண்டு விழா கண்ட ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெஞ்சல் புயல் மழை காரணமாக இப்பள்ளியின் சுற்றுச் சுவர் சுமார் 100 மீட்டர் துாரத்திற்கு இடிந்து விழுந்தது.
இப்பகுதியில் மரம், செடிகள் வளர்ந்து புதர்களாக இருப்பதால் பள்ளிக்குள் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் நுழைகின்றன. மாணவர்கள், ஆசிரியர்கள் அச்சத்துடன் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.
மேலும் பள்ளி விடுமுறை நாட்களில் மற்றும் இரவு நேரங்களிலும் சிலர் பள்ளி வளாகத்தில் அமர்ந்து மது அருந்துகின்றனர்.
இதுபோன்ற செயல்களைத் தவிர்க்க பள்ளியின் சுற்றுச் சுவரை சீரமைக்க தொகுதி எம்.எல்.ஏ., மற்றும் கல்வித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.