/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பயணியர் நிழற்குடை அமைக்க கோரிக்கை
/
பயணியர் நிழற்குடை அமைக்க கோரிக்கை
ADDED : அக் 01, 2025 11:03 PM
அவலுார்பேட்டை: அவலுார்பேட்டையில் பயணியர் நிழற்குடைகள் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.
மேல்மலையனுார் ஒன்றியத்தில், அவலுார்பேட்டையில் 35 ஆண்டுகளுக்கு முன்னர் மேல்மலையனுார் சாலை, கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் 3 நிழற்குடைகள் இருந்தன.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன், மேல்மலையனுார் சாலையில் இருந்த நிழற்குடை ஆக்கிரமிப்பில் சிக்கியது. மேலும் கடை வீதியில் இருந்த 2 நிழற்குடைகளும் சேதமானநிலையில் அகற்றப்பட்டன.
இதனால் அப்பகுதியில் வெயில் மற்றும் மழை நேரங்களில் பஸ்சுக்காக காத்திருக்கும் பெண்கள், பள்ளி மாணவர்கள் , முதியவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.
இது குறித்து சமூக நல ஆர்வலர்கள் கூறுகையில், 'திருவண்ணாமலை, சென்னை, செஞ்சி, போளூர், கீழ் பெண்ணாத்துார், தானிப்பாடி, மேல்மலையனுார் உள்ளிட்ட பல ஊர்களுக்கு செல்வதற்காக பஸ்சுக்கு காத்திருக்கும் பயணிகள் நலன் கருதி இப்பகுதியில் புதிதாக நிழற்குடை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.