/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நீர் வரத்து வாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்ற முதல்வருக்கு கோரிக்கை
/
நீர் வரத்து வாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்ற முதல்வருக்கு கோரிக்கை
நீர் வரத்து வாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்ற முதல்வருக்கு கோரிக்கை
நீர் வரத்து வாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்ற முதல்வருக்கு கோரிக்கை
ADDED : செப் 29, 2024 05:18 AM
செஞ்ச : செஞ்சியில் நீர் வரத்து வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி செப்பனிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் வெங்கடேசன் முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:
செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி, சத்தியமங்கலம் பெரிய ஏரிக்கு தண்ணீர் வரும் வாய்க்கால்களிலும், பாசன வாய்க்கால்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி செப்பனிட வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு பல மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.
வாய்க்கால்களை செப்பனிடாததால் ஏரிகளுக்கு நந்தன் கால்வாயில் இருந்து வரும் நீர் மீண்டும் ஆற்றில் கலந்து வீணாகிறது.
எனவே, தீவிர மழைக்காலம் துவங்கும் முன் கால்வாய்களை சரி செய்தால் சத்தியமங்கலம் பெரிய ஏரி, ஆலம்பூண்டி ஏரி நிரம்புவதுடன் அதிலிருந்து வெளியேறும் நீரால் சத்தியமங்கலம் சித்தேரி, அடுத்துள்ள துாரப்பூண்டி, கூடப்பட்டு ஏரிகளும் நிறையும்.
இதனால், பல கிராமங்கள் பயன் பெறுவதுடன், நுாற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களும் பாசனம் பெறும். எனவே வாய்க்கால்களை சீரமைக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.