/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சென்னையில் ஓ.பி.ஆர்., சிலை நிறுவ அரசுக்கு கோரிக்கை
/
சென்னையில் ஓ.பி.ஆர்., சிலை நிறுவ அரசுக்கு கோரிக்கை
சென்னையில் ஓ.பி.ஆர்., சிலை நிறுவ அரசுக்கு கோரிக்கை
சென்னையில் ஓ.பி.ஆர்., சிலை நிறுவ அரசுக்கு கோரிக்கை
ADDED : டிச 22, 2025 05:56 AM

திண்டிவனம்: தமிழ்நாடு ரெட்டி நல சங்க மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திண்டிவனத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு, மாநில தலைவர் ரவி தலைமை தாங்கி பேசினார். மாநில செயலாளர் ராஜாபூர்ண சந்திரன், பொருளாளர் அருண்குமார், துணைத் தலைவர் சண்முகைய்யா, நிர்வாகிகள் விவேகானந்தன், கோகுல்தாஸ், எத்திராஜ், வழக்கறிஞர் ஜெயப்பிரகாஷ், ரவி உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், வரும் 2026ம் ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி நடைபெறும் முன்னாள் முதல்வர் ஓ.பி.ஆர்.,பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது. சென்னையில் ஓ.பி.ஆர்., முழு உருவ வெண்கல சிலையை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திண்டிவனத்தில் திறக்கப்பட உள்ள நகராட்சி பஸ் நிலையத்திற்கு ஓ.பி.ஆர்., பெயரை சூட்ட வேண்டும். ரெட்டி இன மக்களுக்கு பி.சி., சான்றிதழ் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாத பட்சத்தில், அரசை கண்டித்து முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

