sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ஆர்.டி.ஓ., ஆபீசில் கட்டண அறிவிப்பு பலகை வைக்க கோரிக்கை! கூடுதல் பணம் வசூலிப்பதை தடுக்க நடவடிக்கை தேவை

ஆர்.டி.ஓ., ஆபீசில் கட்டண அறிவிப்பு பலகை வைக்க கோரிக்கை! கூடுதல் பணம் வசூலிப்பதை தடுக்க நடவடிக்கை தேவை

ஆர்.டி.ஓ., ஆபீசில் கட்டண அறிவிப்பு பலகை வைக்க கோரிக்கை! கூடுதல் பணம் வசூலிப்பதை தடுக்க நடவடிக்கை தேவை


UPDATED : பிப் 16, 2026 07:02 AM

ADDED : பிப் 16, 2026 06:48 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 16, 2026 07:02 AM ADDED : பிப் 16, 2026 06:48 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

-நமது நிருபர்-

விழுப்புரம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் அரசு கட்டணத்தைவிட கூடுதலாக பணம் வசூலிப்பதை தடுக்க அறிவிப்பு பலகை வைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில், விழுப்புரம், திண்டிவனம் ஆகிய 2 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகங்களில் புதிய வாகனம் பதிவு, பழைய வாகனங்கள் தகுதிச்சான்று மற்றும் வாகன பர்மிட், டிரைவிங் லைசென்ஸ், விபத்து வாகனங்கள் ஆய்வு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

மாவட்ட தலைநகரில் உள்ள விழுப்புரம் ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு தினமும் நுாற்றுக்கும் மேற்பட்ட புதிய வாகனங்கள் பதிவு செய்யவும், 40க்கும் மேற்பட்ட பழைய வாகனங்கள் தகுதிச்சான்றிதழ் பெறவும் மற்றும் 50க்கும் மேற்பட்டோர் லைசென்ஸ் பெறவும், பர்மிட் புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகளுக்காக பொதுமக்கள், வாகன உரிமையாளர்கள் வந்து செல்கின்றனர்.

இந்த அலுவலகத்தில் சமீப காலமாக புரோக்கர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இவர்கள், பொதுமக்கள், வாகன உரிமையாளர்களிடம் அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதலாக வசூல் செய்து வருகின்றனர்.

அரசு கட்டணம் மற்றும் அதற்கு இணையாக இரண்டு மடங்கு கூடுதலாக பணம் வசூலிக்கின்றனர். இதற்கு, அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்களும் உடந்தையாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. லைசென்ஸ் எடுப்பதில் இருந்து விபத்தில் சிக்கும் வாகனங்கள் வரை கூடுதல் கட்டணம் வசூலிப்பது பொதுமக்கள், வாகன உரிமையாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் லஞ்ச ஒழிப்பு போலீசார் இந்த அலுவலகத்தில் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்தனர். இதையடுத்து, இந்த அலுவலகத்தில் புரோக்கர்களின் ஆதிக்கம் குறைந்திருந்தது. அதேபோன்று, தற்போது லஞ்ச ஒழிப்பு போலீசார், ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தி புரோக்கர்கள் ஆதிக்கத்தை தடுக்க வேண்டும்.

மேலும், கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க ஆர்.டி.ஓ., அலுவலகம் எதிரில், அரசு கட்டணங்கள் குறித்த அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். அதில், கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்கும் வகையில் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் தொடர்பு எண்ணும் அச்சிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us