/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பள்ளத்தில் விழுந்த பசு மாடு மீட்பு
/
பள்ளத்தில் விழுந்த பசு மாடு மீட்பு
ADDED : நவ 10, 2024 04:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானூர் : வானூர் அருகே ஆறு அடி பள்ளத்தில் விழுந்த பசு மாட்டை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
வானூர் அடுத்த மொரட்டாண்டி அருகே ராஜராஜேஸ்வரி கோவில் அருகே ஒருவர் வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டியுள்ளார்.
ஆறு அடி ஆழமுள்ள அந்த பள்ளத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு அப்பகுதியில் சுற்றி திரிந்த பசு மாடு ஒன்று விழுந்து விட்டது.
இது குறித்து தகவறிந்த வானூர் தீயணைப்பு நிலையத்தின் நிலைய அலுவலர் ராஜா தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, பள்ளத்தில் விழுந்த அந்த பசு மாட்டை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.