ADDED : நவ 24, 2026 04:32 PM

செஞ்சி: செஞ்சி அறிவுசார் மையத்தில், பேரூராட்சி மன்ற தலைவர் ஆய்வு செய்தார்.
செஞ்சியில் பேரூராட்சி சார்பில் கடந்த ஆட்சியில் ரூ.1.60 கோடி மதிப்பில் அறிவுசார் மையம் கட்டினர்.
இதன் திறப்பு விழா சமீபத்தில் நடந்தது. திறப்புவிழா அன்று கணினி, உயர் கல்வி மற்றும் போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள் இல்லாமல் இருந்தது. நேற்று புதிய புத்தகங்கள், கணினி வசதி செய்யப்பட்டன.இதையடுத்து மாணவர்கள் கணினி மூலம் படிப்பதற்கு அமைதிக்கப்பட்டனர்.
இவர்களுக்கான வசதிகள் குறித்து பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலி, செயல் அலுவலர் ஷேக் லத்தீப் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
அப்போது மொக்தியார் அலி கூறுகையில், ‘கணினியில் இணையதள வசதி இருப்பதால் இதன் மூலம் போட்டித் தேர்வுகள் குறித்த தகவல்களை தெரிந்து கொள்ளலாம். ஆன்லைன் வழியாகவும் பயிற்சி பெற முடியும்.
காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை அறிவுசார் மையம் செயல்படும். மையத்தை பராமரிக்கவும், மாணவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த மையத்தை பயன்படுத்திக்கொள்ள மாணவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை, என்றார்.
