sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

செஞ்சி பகுதி நினைவு சின்னங்கள் ஆராய்ச்சி மாணவர்கள் ஆய்வு

/

செஞ்சி பகுதி நினைவு சின்னங்கள் ஆராய்ச்சி மாணவர்கள் ஆய்வு

செஞ்சி பகுதி நினைவு சின்னங்கள் ஆராய்ச்சி மாணவர்கள் ஆய்வு

செஞ்சி பகுதி நினைவு சின்னங்கள் ஆராய்ச்சி மாணவர்கள் ஆய்வு


ADDED : ஜூன் 23, 2025 05:10 AM

Google News

ADDED : ஜூன் 23, 2025 05:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி: செஞ்சி பகுதியில் உள்ள நினைவு சின்னங்களை உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவன மாணவர்கள் பார்வையிட்டனர்.

சென்னை, தரமணியில் உள்ள உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட கல்வெட்டு மற்றும் தொல்லியல் மாணவர்கள் களப்பயணமாக நேற்று செஞ்சி பகுதியில் உள்ள நினைவு சின்னங்களை பார்வையிட்டனர்.

திருநாதர் குன்று ஜைன தீர்தங்கரர் சிற்பம், தமிழ் பிராமி கல்வெட்டு, சிங்கவரம் ரங்கநாதர் கோவில், மேலச்சேரி மத்தளேஸ்வரர் கோவில், நெகனுார் பட்டி சமணர் பள்ளி, தொண்டூர், சீயமங்கலம் பல்லவர் கால நினைவு சின்னங்களை பார்வையிட்டனர். தமிழக தொல்லியல் துறை மேலாண்மை இயக்குநர் வசந்தி, பேராசிரியர்கள் ஜீவா, ஜானகி ஆகியோர் மாணவர்களை வழி நடத்தினர்.

விழுப்புரம் அரசு கலைக் கல்லுாரி பேராசிரியர் ரமேஷ், அகிம்சை நடை அமைப்பின் தலைவர் ஸ்ரீதரன் ஆகியோர் மாணவர்களுக்கு வரலாற்று சின்னங்கள் அதன் முக்கியத்துவம் குறித்து விளக்கினர்.

மாணவர்கள் அவதி


செஞ்சி பகுதியில் உள்ள வரலாற்று நினைவிடங்களுக்கு செல்வதற்கான பாதைகள் சரியில்லை.

குறிப்பாக திருநாதர் குன்று, நெகனுார் பட்டி, தொண்டுர் ஆகிய பகுதிகளில் சாலை வசதியின்றி மாணவர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.






      Dinamalar
      Follow us