/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரூ.16 லட்சத்தில் நீர்தேக்க தொட்டி அடிக்கல் நாட்டு விழா
/
ரூ.16 லட்சத்தில் நீர்தேக்க தொட்டி அடிக்கல் நாட்டு விழா
ரூ.16 லட்சத்தில் நீர்தேக்க தொட்டி அடிக்கல் நாட்டு விழா
ரூ.16 லட்சத்தில் நீர்தேக்க தொட்டி அடிக்கல் நாட்டு விழா
ADDED : ஜன 09, 2024 11:01 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி, -செஞ்சி அடுத்த கவரை ஊராட்சியில் ஜல் ஜீவன் திட்டத்தில் 16 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
ஒன்றிய சேர்மன் விஜயகுமார் தலைமை தாங்கினார். பேரூராட்சி சேர்மன் மொக்தியார், ஒன்றிய கவுன்சிலர் பனிமலர் ராஜாராம் முன்னிலை வகித்தார். ஊராட்சி தலைவர் அய்யனார் வரவேற்றார். அமைச்சர் மஸ்தான் பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார்.
மாவட்ட கவுன்சிலர் ஏழுமலை, ஒன்றிய பொருளாளர் இக்பால், மாவட்ட பிரதிநிதி அய்யாதுரை, குமார், ராஜாராமன், பழனி உட்பட பலர் பங்கேற்றனர்.