/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விக்கிரவாண்டியில் வார சந்தை பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்
/
விக்கிரவாண்டியில் வார சந்தை பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்
விக்கிரவாண்டியில் வார சந்தை பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்
விக்கிரவாண்டியில் வார சந்தை பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்
ADDED : செப் 19, 2024 11:13 PM
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் ரயில்வே மைதானத்தில் வார சந்தை அமைக்க ரயில்வே அமைச்சரிடம் மீண்டும் கோரிக்கை வைப்பது என பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விக்கிரவாண்டி பேரூராட்சி கூட்டம் பேரூராட்சி மன்ற கூடத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு சேர்மன் அப்துல் சலாம் தலைமை தாங்கினார். துணைச் சேர்மன் பாலாஜி, செயல் அலுவலர் ேஷக் லத்தீப் முன்னிலை வகித்தனர். இளநிலை அலுவலர் ராஜேஷ் வரவேற்று, வரவு, செலவு மற்றும் தீர்மானங்களை வாசித்தார். பேரூராட்சி நியமன குழு உறுப்பினர் சர்க்கார் பாபு, கவுன்சிலர்கள், அலுவலக பணியாளர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் விக்கிரவாண்டியில் வார சந்தை ரயில்வே மைதானத்தில் அமைக்க வேண்டும். இதற்கு ரயில்வே அமைச்சரிடம் ஏற்கனவே அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவை பரிசீலனை செய்ய கோருவது. எம்.பி., மூலம் மீண்டும் மனு அளிப்பது. சமுதாய கூடம் கட்ட வேண்டும். 3 இடங்களில் ஹைமாஸ் விளக்கு அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து ரவிக்குமார் எம்.பி., அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., ஆகியோரிடம் கோரிக்கை வைப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.