/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கார் மோதி ஓய்வு பெற்ற கண்டக்டர் பலி; திண்டிவனம் புறவழிச்சாலையில் மறியல்
/
கார் மோதி ஓய்வு பெற்ற கண்டக்டர் பலி; திண்டிவனம் புறவழிச்சாலையில் மறியல்
கார் மோதி ஓய்வு பெற்ற கண்டக்டர் பலி; திண்டிவனம் புறவழிச்சாலையில் மறியல்
கார் மோதி ஓய்வு பெற்ற கண்டக்டர் பலி; திண்டிவனம் புறவழிச்சாலையில் மறியல்
ADDED : ஜன 15, 2024 06:23 AM

திண்டிவனம் : திண்டிவனம் அருகே, ஓய்வு பெற்ற அரசு பஸ் கண்டக்டர் மீது கார் மோதி இறந்ததை கண்டித்து, உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டிவனம் கர்ணாவூரைச் சேர்ந்தவர் அர்ஜூனன், 61; ஓய்வு பெற்ற அரசு பஸ் கண்டக்டர். இவர் நேற்று மாலை 4:30 மணியளவில், கர்ணாவூரிலிருந்து மொபட்டில், திண்டிவனம் - சென்னை புறவழிச்சாலையில் கர்ணாவூர் கூட்ரோட்டை கடக்க முயன்றார்.
அப்போது விழுப்புரத்திலிருந்து சென்னை நோக்கிச் சென்ற சபாரி கார் மொபட் மீது மோதி சாலை டிவைடர் மீது மோதி நின்றது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அர்ஜூனன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
தகவல் அறிந்த அர்ஜூனன் உறவினர்கள் மற்றும் கர்ணாவூர் பகுதியைச் சேர்ந்த பொது மக்கள், கர்ணாவூர் கூட்ரோட்டில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர். விபத்துகளைத் தவிர்க்க, மேம்பாலம் கட்ட வேண்டும் என வலியுறுத்தி மாலை 5:00 மணியளவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த டி.எஸ்.பி., சுரேஷ் பாண்டியன், இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி மற்றும் போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், கோரிக்கை குறித்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து, 5:30 மணியளவில் சாலை மறியல் விலக்கிக் கொண்டனர். சாலை மறியல் காரணமாக, திண்டிவனம் - சென்னை புறவழிச்சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.
விபத்து குறித்து திண்டிவனம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.