/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சாலையில் சென்ற மினி வேன் கதவை திறந்ததால் விபத்து; ஓய்வு பெற்ற அரசு அதிகாரி பலி

ADDED : டிச 11, 2024 07:40 AM

வானுார்: ஆரோவில் அருகே சாலையில் சென்றபோது, மினி வேன் டிரைவர், கதவை திறந்ததால், மோதி விபத்துக்குள்ளான ஓய்வு பெற்ற அரசு அதிகாரி இறந்தார்.
கிளியனுார் அடுத்த வில்வநத்தம், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சவுந்தரராஜன், 68; சென்னையில் மெட்ரோ வாட்டர் பிரிவில் அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றனர்.
இவர், நேற்று முன்தினம் தனது வீட்டில் இருந்து ஹோண்ட ஆக்டிவா ஸ்கூட்டரில் புதுச்சேரி - திண்டிவனம் பைபாஸ் சாலை வழியாக மொரட்டாண்டி நோக்கிச் சென்றார்.
இடையஞ்சாவடி குதிரை பண்ணை சாலை சந்திப்பு அருகே சென்றபோது, அதே திசையில் முன்னால் சென்ற மினி வேன் டிரைவர், திடீரென கதவை திறந்தபோது, சவுந்தரராஜன் தலையில் கதவு அடித்து கீழே விழுந்ததில் படுகாயமடைந்தார்.
உடன், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் இறந்தார்.
ஆரோவில் போலீசார் வழக்குப் பதிந்த விசாரித்து வருகின்றனர்.