/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க பேரவைக் கூட்டம்
/
ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க பேரவைக் கூட்டம்
ADDED : செப் 29, 2024 05:21 AM

திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுாரில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க 35வது ஆண்டு பேரவைக் கூட்டம் நடந்தது.
சங்கத் தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். திருநாராயணன் முன்னிலை வகித்தார். மணி வரவேற்றார்.
செயலாளர் ஜெகந்நாதன் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் செல்வராஜ் வரவு - செலவு வாசித்தார். இணைச் செயலாளர் வடிவேல் தீர்மானங்கள் வாசித்தார்.
கடலுார் மண்டல மாநில துணைத் தலைவர் கலியபெருமாள் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில், ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்சம் 9,000 ரூபாய் வழங்க வேண்டும். மருத்துவப்படி 300 ரூபாயில் இருந்து 1,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உட்பட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.