/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஓய்வு பெற்ற அலுவலர் சங்க முப்பெரும் விழா
/
ஓய்வு பெற்ற அலுவலர் சங்க முப்பெரும் விழா
ADDED : ஆக 18, 2025 12:56 AM

விழுப்புரம்; விழுப்புரத்தில், சுதந்திர தின விழா, ஓய்வூதியர்களின் தந்தை டி.எஸ்.நகரா நினைவு தினம், சுதந்திர போராட்ட தியாகி தண்டபாணி நினைவேந்தல் ஆகிய முப்பெரும் விழா நடந்தது.
ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் சார்பில் நடந்த விழாவிற்கு, மாவட்ட இணைச் செயலாளர் துரைக்கண்ணு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அருணகிரி வரவேற்றார். துணைத் தலைவர் தென்னரசு, செயற்குழு உறுப்பினர்கள் பிச்சப்பிள்ளை, ராஜேந்திரன், பொருளாளர் கலியமூர்த்தி, மாவட்ட தலைவர் ஞானம் ஆகியோர், மறைந்த தலைவர்கள் படங்களை திறந்து வைத்து அஞ்சலி செலுத்தினர்.
மாநில இணைச் செயலாளர் ரகுபதி தேசிய கொடி ஏற்றினார். கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் குணசேகரன், விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், மாநகராட்சி தூய்மை பணியாளர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும். 70 வயதை நிறைவடைந்த அனைத்து ஓய்வூதியர்களுக்கும் 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.