/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஓய்வு பெற்ற நில அளவை அலுவலர்கள் சங்க பொதுக்குழு
/
ஓய்வு பெற்ற நில அளவை அலுவலர்கள் சங்க பொதுக்குழு
ADDED : செப் 07, 2025 11:01 PM

விழுப்புரம்: தமிழ்நாடு ஓய்வு பெற்ற நில அளவை அலுவலர்கள் சங்க, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது.
விழுப்புரத்தில் நடந்த கூட்டத்தில், மாவட்ட தலைவர் நாகலிங்கம் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ராமதாஸ் முன்னிலை வகித்தார்.
துணைச் செயலாளர் சண்முகவேலு வரவேற்றார். மாவட்ட செயலாளர் ராமலிங்கம் செயல் அறிக்கையையும், பொருளாளர் ராமலிங்கம் வரவு, செலவு அறிக்கையையும் தாக்கல் செய்தனர். மாநில பொருளாளர் சாம்பசிவம் வாழ்த்தி பேசினார். மாநில தலைவர் ராமசுப்பு சிறப்புரையாற்றினார்.
புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட தலைவராக மோகன்ராஜ், செயலாளர் ஜெயச்சந்திரன், பொருளார் கிருஷ்ணன் மற்றும் துணைத் தலைவர்கள், துணைச் செயலாளர்கள், மாநில செயற்குழு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கூட்டத்தில், பழைய ஓய்வூதியர்களின் உரிமையை பாதிக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.