/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரெட்டணை ஹோலி ஏஞ்சல் சி.பி.எஸ்.இ., பள்ளியில் ஆண்டு விழா
/
ரெட்டணை ஹோலி ஏஞ்சல் சி.பி.எஸ்.இ., பள்ளியில் ஆண்டு விழா
ரெட்டணை ஹோலி ஏஞ்சல் சி.பி.எஸ்.இ., பள்ளியில் ஆண்டு விழா
ரெட்டணை ஹோலி ஏஞ்சல் சி.பி.எஸ்.இ., பள்ளியில் ஆண்டு விழா
ADDED : மார் 21, 2024 12:13 AM

மயிலம், :  ரெட்டணை ஹோலி ஏஞ்சல் சி.பி.எஸ். இ., மேல்நிலைப் பள்ளியில்  ஆண்டு விழா நடந்தது.
பள்ளி வளாகத்தில் நடந்த விழாவுக்கு தாளாளர் பழனியப்பன் தலைமை தாங்கினார். பள்ளி முதுநிலை முதல்வர் அகிலா ஆண்டறிக்கை வாசித்தார்.
வந்தவாசி முன்னாள் எம்.பி.,  துரை, விழுப்புரம் சரஸ்வதி கல்வி குழும தாளாளர் ராஜேஷ், சேகரன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்கள்.
ஞானசேகர் மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்துரை வழங்கினார். பள்ளி  ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
சென்ற கல்வி ஆண்டில் 10ம் வகுப்பில் முதலிடத்தை பெற்ற  மாணவி கிருத்திகாவிற்கு  நினைவுப் பரிசு வழங்கினார்கள்.
ஆண்டு விழாவை முன்னிட்டு நடந்த விளையாட்டு, பேச்சு, கவிதை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ மாணவியர்களின் நடனம், பாட்டு போட்டிகள் நடந்தது.
விழாவில் ஹோலி ஏஞ்சல் சி.பி.எஸ்.இ., ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

