ADDED : ஏப் 08, 2025 04:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடந்தது.
கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முருகன், மத்திய செயற்குழு உறுப்பினர் வெங்கடபதி உள்ளிட்டோர் கோரிக்கை வலியுறுத்தி உரையாற்றினர். வருவாய்த்துறை அலுவலர்களின் பணித்தன்மையை கருத்தில் கொண்டு, மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும், அலுவலக உதவியாளர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

