ADDED : ஏப் 27, 2025 04:45 AM

அவலுார்பேட்டை : மேல்மலையனுாரில் வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சிறப்பு பணி பாதுகாப்பு சட்டம், காலி பணியிடங்களை நிரப்புதல், அரசு திட்டங்களை நிறைவேற்ற போதிய கால அவகாசம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் மாலை வருவாய்த்துறை அலுவலர்கள் ஒரு மணி நேரம் வெளிநடப்பு செய்து, மேல்மலையனுார் தாலுகா அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தமிழ்நாடு வி.ஏ.ஓ., சங்க ஒருங்கிணைப்பாளர்கள் பாலாஜி, அன்பழகன், வி.ஏ.ஓ., முன்னேற்ற சங்க ஒருங்கிணைப்பாளர்கள் காளிதாஸ், குமரவேல், சர்வேயர் சங்க ஒருங்கிணப்பாளர் நாகராஜ், கிராம ஊழியர் சங்க ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணி உள்ளிட்ட 127 வருவாய் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செஞ்சி
தாலுகா அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கம், கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம், கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம், கிராம உதவியாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு நில அளவையர் சங்கம் ஆகியோர் இணைந்து கோரிக்கைகளை வலியுறுத்தி வெளிநடப்பு போராட்டம் நடந்தது. அனைத்து சங்கங்களின் மாவட்ட, வட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.