/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வருவாய்த்துறை அலுவலர் சங்கம் போராட்டம் அறிவிப்பு
/
வருவாய்த்துறை அலுவலர் சங்கம் போராட்டம் அறிவிப்பு
ADDED : மே 25, 2025 05:14 AM
விழுப்புரம் : தமிழ் மாநில வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் 4 கட்ட போராட்டங்களை அறிவித்துள்ளனர்.
விழுப்புரத்தில் தமிழ் மாநில வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் நடந்தது.
அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, சங்க மாநில பொதுச்செயலர் சுந்தர்ராஜன் வெளியிட்ட அறிக்கை;
விழுப்புரத்தில் நடந்த மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுவின்படி, போராட்டத்திற்கு தயாராக வேண்டும்.
தமிழக அரசால் வெளியிட்ட ஆணை, வழிகாட்டு நெறிமுறைகள் இன்றி, மாவட்ட நிர்வாகம் செயல்படுத்தியுள்ள கலந்தாய்வு இடமாறுதலை ரத்து செய்ய வேண்டும், விதிகளுக்கு மாறாக வழங்கிய 2 துணை தாசில்தார் பணியிட மாற்றத்தை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட 8 தீர்மானம் நிறைவேற்றி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, ஜூன் 2, 9, 19 ஆகிய தேதிகளில் 4 கட்ட போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.