/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஊரக வளர்ச்சி துறையில் வீடு கட்டும் திட்டங்கள் குறித்து ஆய்வுக் கூட்டம்
/
ஊரக வளர்ச்சி துறையில் வீடு கட்டும் திட்டங்கள் குறித்து ஆய்வுக் கூட்டம்
ஊரக வளர்ச்சி துறையில் வீடு கட்டும் திட்டங்கள் குறித்து ஆய்வுக் கூட்டம்
ஊரக வளர்ச்சி துறையில் வீடு கட்டும் திட்டங்கள் குறித்து ஆய்வுக் கூட்டம்
ADDED : ஏப் 07, 2025 06:31 AM
விழுப்புரம்; விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை சார்பில், வீடுகள் கட்டும் திட்டத்தில் முன்னேற்ற பணிகள் குறித்து, துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடந்தது.
ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் நடந்த கூட்டத்திற்கு கலெக்டர் ஷேக்அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில், ஊரக வளர்ச்சி துறை சார்பில், அனைத்து ஊராட்சிகளிலும் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்தும், வீடு கட்டும் திட்டங்களின் கீழ் கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளின் முன்னேற்றம் குறித்து, துறை சார்ந்த அலுவலர்களிடம் விரிவாக கேட்டறியப்பட்டது.
கலைஞரின் கனவு இல்லம், ஊரக வீடுகள் மறு சீரமைப்புத் திட்டம், பிரதமரின் ஆவாஸ் யோஜனா மற்றும் பி.எம்., ஜன்தன் திட்டத்தின் கீழ் அனைத்து ஊராட்சிகளிலும் தொடங்கப்பட்டு நடைபெற்று வரும் வீடுகளின் கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம் குறித்தும், கலெக்டர் விரிவாக கேட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, வீடுகளுக்கு நிதி வழங்குவதில், ஒவ்வொரு தவணை முடிந்தவுடன் அதுதொடர்பான ரசீதை உடனடியாக பயனாளியிடம் வழங்கிட வேண்டும்.
கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தகுதிவாய்ந்த புதிய பயனாளிகளுக்கு வீடுகள் கட்டிக்கொடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேல்தளம் ஒட்டப்பட்டுள்ள வீடுகளுக்கான மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். காலகட்டத்திற்குள் பணிகளை விரைந்து முடிக்க, அதிகாரிகள் தொடர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பத்மஜா, ஊரக வளர்ச்சி துறை செயற்பொறியாளர் ராஜா உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.