/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
புரட்சி பாரதம் கட்சியினர் தர்ணா
/
புரட்சி பாரதம் கட்சியினர் தர்ணா
ADDED : ஜூலை 01, 2025 01:43 AM
விழுப்புரம் : புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட செயலர் தமிழரசன், அமைப்பாளர் செல்வராஜ் தலைமையில் புரட்சி பாரதம், ஒருங்கிணைந்த இந்திய குடியரசு கட்சி மற்றும் சில அமைப்பினர் விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன்பு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரத்தில் அம்பேத்கருக்கு மணிமண்டபம் கட்ட 5 சென்ட் இடம் வழங்க கோரி கலெக்டரிடம், கடந்த 2018 முதல் பல முறை மனு அளித்து வருகிறோம். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை என்றும் கடிதம் தந்துள்ளனர். மணிமண்டபம் கட்டுவதற்கு இடம் வழங்காவிட்டால் ஆக. 25ம் தேதி போராட்டம் நடத்துவோம் என தெரிவித்தனர். போலீசார் சமாதானப்படுத்தி, கலெக்டரிடம் மனு அளிக்குமாறு கூறி அனுப்பினர்.