தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ அரிசி மூட்டைகள் பறிமுதல்

 அரிசி மூட்டைகள் பறிமுதல்

 அரிசி மூட்டைகள் பறிமுதல்


ADDED : மார் 21, 2026 06:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 21, 2026 06:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே மினி லாரியில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட அரிசி முட்டைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

விக்கிரவாண்டி டோல்கேட்டில் நேற்று மாலை தேர்தல் பறக்கும் படை நிலை கண்காணிப்பு குழு அலுவலர் பாரதி தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, விழுப்புரத்திலிருந்து விக்கிரவாண்டி நோக்கி வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்ததில், உரிய ஆவணங்கள் இன்றி அரிசி 100 சிப்பங்கள் கொண்டு செல்வது தெரியவந்தது. உடன், அரிசி மூட்டைகளுடன் லாரியை பறிமுதல் செய்து, தொகுதி தேர்தல் அலுவலர் விஜயாவிடம் ஒப்படைத்தனர்.

உதவி தேர்தல் அலுவலர் மகாதேவன், தேர்தல் தனி தாசில்தார் பாரதிதாசன், சமூக நலதாசில்தார் வேல்முருகன் மண்டல துணை தாசில்தார் விஜயன் ஆகியோர் உடன் இருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us