/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வாய்க்கால் ஆக்கிரமிப்பால் நெற்பயிர்கள் மூழ்கி சேதம்
/
வாய்க்கால் ஆக்கிரமிப்பால் நெற்பயிர்கள் மூழ்கி சேதம்
வாய்க்கால் ஆக்கிரமிப்பால் நெற்பயிர்கள் மூழ்கி சேதம்
வாய்க்கால் ஆக்கிரமிப்பால் நெற்பயிர்கள் மூழ்கி சேதம்
ADDED : அக் 29, 2025 07:30 AM
விழுப்புரம்: விழுப்புரம் அருகே தெளி கிராமத்தில் வாய்க்கால் ஆக்கிரமிப்பால் நெற் பயிர்கள் மூழ்கி பாதித்துள்ளதாக விவசாயிகள் புகார் மனு அளித்தனர்.
விழுப்புரம் அடுத்த தெளி கிராமத்தை சேர்ந்த விவசாயிகள், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு:
தெளி கிராம ஏரியிலிருந்து செல்லும் வடிகால் வாய்க்காலை, தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்துள்ளார். இதனால், வடிகால் வாய்க்கால் மிகவும் குறுகலாக, தண்ணீர் செல்ல வழியில்லாத நிலை உள்ளது.
இந்த ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி, பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையினால், மழைநீர் வெளியேற வழியின்றி 100 ஏக்கர் பரப்பளவுள்ள விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.
இதனால், நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. எங்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, ஏரி வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்றியும், வாய்க்காலை அகலப்படுத்தியும் தர வேண்டும். மழையினால் சேதமடைந்த பயிர்களுக்கும், உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

