/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பைக் மீது லாரி மோதல் அரிசி வியாபாரி பலி
/
பைக் மீது லாரி மோதல் அரிசி வியாபாரி பலி
ADDED : ஜூலை 05, 2025 04:40 AM

விழுப்புரம் : பைக்கில் சென்ற அரிசி வியாபாரி லாரி மோதி இறந்தார்.
விழுப்புரம் அடுத்த விக்கிரவாண்டி, தனலட்சுமி நகரை சேர்ந்தவர் ராஜ்பான்ராய்,50; வட மாநிலத்தை சேர்ந்த இவர், கடந்த, 30 ஆண்டாக குடும்பத்தோடு விக்கிரவாண்டியில் தங்கி, அரிசி ஆலையில் வேலை செய்து வந்தார். சில மாதங்களாக சொந்தமாக அரிசி வாங்கி வியாபாரம் செய்து வந்தார்.
நேற்று காலை 10:30 மணிக்கு 'பைக்'கில் மூன்று அரிசி சிப்பங்களை ஏற்றிக் கொண்டு விழுப்புரத்திற்கு புறப்பட்டார். விழுப்புரம் பைபாஸ் முத்தம்பாளையம் சந்திப்பில் சென்றபோது, 'பைக்' நிலை தடுமாறியபோது, பின்னால் வந்த கன்டெய்னர் லாரி மோதி கீழே விழுந்தார். அதில், அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
தகவலறிந்த விழுப்புரம் தாலுகா இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் மற்றும் போலீசார், ராஜ்பான்ராய் உடலை கைப்பற்றி விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மேம்பால பணியால் விபத்து