/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் திட்ட ஆலோசனை
/
மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் திட்ட ஆலோசனை
ADDED : செப் 18, 2025 03:40 AM
விழுப்புரம்:மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ், தமிழக உரிமைகள் திட்டம் செயல்படுத்தப்படுவது தொடர்பான விளக்க கூட்டம் நடந்தது.
விழுப்புரம், தனியார் விடுதியில் நடந்த கூட்டத்தில், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் ராஜசேகர் வரவேற்றார்.
சமூக பாதுகாப்பு திட்ட சப் கலெக்டர் முகுந்தன் தலைமை வகித்தார். மாற்றுத்திறனாளிகள் மாநில ஆணையக உதவி இயக்குனர் ரவீந்திரன், தமிழக உரிமைகள் திட்ட மாநில மேலாளர்கள் ராஜராஜன், சங்கர், சகாயராஜ் ஆகியோர் திட்டம் குறித்து விளக்கினர்.
இந்த கூட்டத்தில், திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட உள்ள பல்வேறு சேவைகள் மற்றும் அதன் செயல்பாடுகள்; மாற்றுத்திறனாளிகள் எளிதில் பயனடையும் வகையில், அவர்களின் இருப்பிடத்திற்கு அருகிலேயே அரசு நலத்திட்டங்கள் மற்றும் சேவைகள் வழங்கும் வகையில் ஊரக மற்றும் நகர்ப்புறங்களில் சேவை மையங்கள் நிறுவுதல்; உள்ளிட்ட பல்வேறு சேவைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.