/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
உரிமை மீட்பு குழு கூட்டம் ஓ.பி.எஸ்.,பங்கேற்பு
/
உரிமை மீட்பு குழு கூட்டம் ஓ.பி.எஸ்.,பங்கேற்பு
ADDED : பிப் 01, 2024 05:36 AM
செஞ்சி: விழுப்புரத்தில் நாளை நடக்கும் உரிமை மீட்பு குழு கூட்டத்தில் முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் கலந்து கொள்கிறார்.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட செயலாளர் ஏழுமலை விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
நாளை (2ம் தேதி) காலை 11 மணிக்கு விழுப்புரம் வி.வி,ஏ., பாலாஜி மஹாவில் அ.தி.மு.க., தொண்டர்களின் உரிமை மீட்பு குழு கூட்டம் நடைபெற உள்ளது.இதில் முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் கலந்து கொண்டு பேச உள்ளார். இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இன்று (1ம் தேதி) மாலை விழுப்புரம் வருகை தரும் பன்னீர்செல்வத்திற்கு வரவேற்பு அளிப்பதற்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர் ஏழுமலை, தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் வழக்கறிஞர் கதிரவன் ஆகியோர் செய்து வருகின்றனர்.