/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சாலை நடுவே மரண பள்ளத்தால் விபத்து கண்டமங்கலம் அருகே மறியல் போராட்டம்
/
சாலை நடுவே மரண பள்ளத்தால் விபத்து கண்டமங்கலம் அருகே மறியல் போராட்டம்
சாலை நடுவே மரண பள்ளத்தால் விபத்து கண்டமங்கலம் அருகே மறியல் போராட்டம்
சாலை நடுவே மரண பள்ளத்தால் விபத்து கண்டமங்கலம் அருகே மறியல் போராட்டம்
ADDED : நவ 25, 2025 04:56 AM

கண்டமங்கலம்: கண்டமங்கலம் அருகில் உள்ள ஆலமரத்துக்குப்பத்தில் சாலை பள்ளம் சீரமைக்காததை கண்டித்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி தவளக்குப்பத்தில் இருந்து ஏம்பலம் வழியே மடுகரை செல்லும் சாலை, புதுச்சேரி பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
இப்பாதையில் நல்லாத்துார், கோண்டூர், பாக்கம் கூட்ரோடு, ஆலமரத்துக்குப்பம் ஆகிய தமிழக பகுதிகள் அமைந்துள்ளது.
ஆலமரத்துக்குப்பம் பகுதியில் சாலை சேதமடைந்து விபத்து ஏற்படுத்தும், மரண பள்ளங்கள் உருவானது. சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரால் பள்ளங்கள் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்திற்குள்ளாகி வருகின்றனர்.
இது குறித்து பொதுமக்கள் கோண்டூர் ஊராட்சி நிர்வாகம், பி.டி.ஓ., அலுவலக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அச்சாலை புதுச்சேரி அரசு பராமரிப்பில் இருப்பதால், தமிழக ஊராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.
இந்த நிலையில் நேற்று காலை 9:30 மணிக்கு அவ்வழியே பைக்கில் சென்ற 2 பேர் பள்ளத்தில் விழந்து காயம் அடைந்தனர். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் சாலை பள்ளம் சீரமைக்காததை கண்டித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கண்டமங்கலம் இன்ஸ்பெக்டர் பாண்டியன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்டைத கைவிட்டு கலைந்து சென்றனர்.இதனால் தவளக்குப்பம்-மடுகரை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

