/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மா.கம்யூ.,வினர் சாலை மறியல் கண்டாச்சிபுரத்தில் பரபரப்பு
/
மா.கம்யூ.,வினர் சாலை மறியல் கண்டாச்சிபுரத்தில் பரபரப்பு
மா.கம்யூ.,வினர் சாலை மறியல் கண்டாச்சிபுரத்தில் பரபரப்பு
மா.கம்யூ.,வினர் சாலை மறியல் கண்டாச்சிபுரத்தில் பரபரப்பு
ADDED : ஆக 04, 2025 11:03 PM

கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரத்தில், அடிப்படை வசதி மற்றும் பட்டா வழங்கக்கோரி மா.கம்யூ., கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பஸ் நிலையம் அருகே மா.கம்யூ., சார்பில் தொடர் முழக்க போராட்டம் நேற்று நடந்தது.
கிளைச் செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார்.
ஸ்ரீதர், ஏழுமலை, பாபு, வடிவேல் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், கண்டாச்சிபுரத்தில் தினமும் குடிநீர் வழங்க வேண்டும்.
அம்ேபத்கர் நகர், இந்திரா நகர் பகுதி மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும்.
மடவிளாகம் பகுதி சுடுகாட்டிற்கு பாதை அமைத்து தர வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து திடீரென முன்னாள் எம்.எல்.ஏ., ராமமூர்த்தி, மாவட்ட செயலாளர் சுப்ரமணியன் உள்ளிட்ட நிர்வாகிகள் திடீரென விழுப்புரம் - திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் 12:00 மணியளவில் மறியலில் ஈடுபட்டனர்.
சப் இன்ஸ்பெக்டர் காத்தமுத்து மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து 12:15 மணிக்கு மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

