/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பணிக்குச் சென்ற பெண்களை மறித்ததை கண்டித்து வீடூரில் சாலை மறியல்
/
பணிக்குச் சென்ற பெண்களை மறித்ததை கண்டித்து வீடூரில் சாலை மறியல்
பணிக்குச் சென்ற பெண்களை மறித்ததை கண்டித்து வீடூரில் சாலை மறியல்
பணிக்குச் சென்ற பெண்களை மறித்ததை கண்டித்து வீடூரில் சாலை மறியல்
ADDED : ஜன 29, 2024 06:40 AM

விக்கிரவாண்டி, : விக்கிரவாண்டி அருகே வேனில், பணிக்குச் சென்ற பெண்களை மறித்து டிராக்டரை குறுக்கே நிறுத்தி வழிவிட மறுத்த நபர்களைக் கண்டித்து வீடூரில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.
விக்கிரவாண்டி அடுத்த வீடூர் கிராம பெண்கள் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவத்தில் கான்ட்ராக்ட் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களை தினமும் கான்ட்ராக்டர் மூலம் வேனில் அழைத்துச் செல்லப்படுவது வழக்கம்.
நேற்று முன்தினம் 20 பெண்கள் புதுச்சேரி மாநிலத்திற்கு பொம்பூர் கிராமம் வழியாக சென்றனர். அப்போது முன்னால் பொம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஓட்டிச் சென்ற டிராக்டர் சென்றது.
பின்னால் சென்ற வேன் டிரைவர் ஹாரன் அடித்ததால், இரு வாகன டிரைவர்களுக்குமிடையே தகராறு ஏற்பட்டது. பின், அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், நேற்று காலை 6:00 மணிக்கு வழக்கம் போல் அதே வேனில் பெண்கள் வேலைக்குச் சென்றனர். அப்போது பொம்பூரில், டிராக்டர் டிரைவர் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் வேனுக்கு வழிவிட மறுத்து டிராக்டரை சாலையில் நிறுத்தி தங்கள் ஊர் வழியாக செல்லக்கூடாது என மறித்தனர்.
இதனால், வேலைக்குச் செல்லாமல் வீடூர் திரும்பி பெண்கள், காலை 8:00 மணிக்கு திண்டிவனம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
விக்கிரவாண்டி இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன், சப் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில், பொம்பூரில் டிராக்டரை குறுக்கே நிறுத்தி வழி மறித்த நபர்கள் மீது புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்பதாக கூறியதன்பேரில் அனைவரும் 9:00 மணிக்கு கலைந்து சென்றனர்.