/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மணல் கடத்தல் தடுக்க சாலை அடைப்பு: கிராம மக்கள் அதிரடி
/
மணல் கடத்தல் தடுக்க சாலை அடைப்பு: கிராம மக்கள் அதிரடி
மணல் கடத்தல் தடுக்க சாலை அடைப்பு: கிராம மக்கள் அதிரடி
மணல் கடத்தல் தடுக்க சாலை அடைப்பு: கிராம மக்கள் அதிரடி
ADDED : மே 01, 2025 05:10 AM

கண்டமங்கலம்: கண்டமங்கலம் அருகே பம்பையாற்றில் மணல் கடத்தலை தடுக்க பெரியபாபுசமுத்திரம் கிராம மக்கள் ஆற்றங்கரைக்கு செல்லும் சாலையின் குறுக்கே பெரிய கருங்கல் வைத்து தடுப்பு ஏற்படுத்தியுள்ளனர்.
கண்டமஙகலம் ரயில்வே மேம்பாலத்தில் இருந்து வானுார் செல்லும் சாலையில், பெரியபாபுசமுத்திரம் ஐய்யனார் கோவில் கிழக்கே உள்ள வயல்வெளிச் சாலை வழியாக டிப்பர், மினி லாரிகள் மூலம் பம்பை ஆற்றில் இருந்து இரவு நேரங்களில் மணல் கடத்தப்பட்டு வருகிறது.
இது குறித்து பெரியபாபுசமுத்திரம் கிராம மக்கள் வருவாய் மற்றும் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.
மணல் கடத்தலை தடுக்க கிராம பொதுமக்கள் தாங்களே களத்தில் இறங்கினர். வானுார் சாலையில் இருந்து பம்பையாற்றுக்கு செல்லும் வயல்வெளிச் சாலையின் குறுக்கே லாரிகள் செல்ல முடியாதபடி, பெரிய பாறை கற்கள் வைத்து தடுப்பு ஏற்படுத்தியுள்ளனர்.
கிராம மக்கள் எதிர்ப்பை மீறி மணல் கடத்தினால் பிரச்சனை பெரிதாகிவிடும் என்பதால் அவ்வழியே கடத்தல் லாரிகள் செல்வது தற்போது தடைபட்டுள்ளது.