/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சூரப்பட்டு அருகே சாலை சேதம்: போக்குவரத்து பாதிப்பு
/
சூரப்பட்டு அருகே சாலை சேதம்: போக்குவரத்து பாதிப்பு
சூரப்பட்டு அருகே சாலை சேதம்: போக்குவரத்து பாதிப்பு
சூரப்பட்டு அருகே சாலை சேதம்: போக்குவரத்து பாதிப்பு
ADDED : டிச 04, 2024 07:57 AM

கண்டாச்சிபுரம்: விழுப்புரம் - திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் சூரப்பட்டு அருகே வெள்ளத்தில் சாலை அரித்து சென்றதால் போக்குவரத்து பாதித்தது.
விழுப்புரம் - திருவண்ணாமலை சாலையில் சூரப்பட்டு பாலத்தின் அருகே ஏற்பட்ட வெள்ளத்தால் சாலையின் ஒருபகுதி அடித்துச் செல்லப்பட்டது. மேலும், அந்த வழியில் சென்று கொண்டிருந்த கார் ஒன்றும் சாலையில் இருந்து 200 மீட்டர் துாரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டது.
காரில் இருந்த டிரைவர் அதிர்ஷ்டவசமாக தப்பினார். தொடர் மழை காரணமாக கெடார், சூரப்பட்டு, அரியலுார் திருக்கை, கண்டாச்சிபுரம் ஆகிய ஊர்களின் அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் போக்குவரத்து பாதிக்கும் அளவிற்கு சாலை பழுதடைந்துள்ளது.