ADDED : டிச 20, 2025 06:57 AM

அ நிறம் | அளவு
விழுப்புரம்: விழுப்புரத்தில் சாலை மேம்படுத்தும் பணியை கலெக்டர் ஆய்வு செய்தார்.
விழுப்புரம் நகராட்சி கம்பன் நகரில், நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகு மூலம் விரிவான சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை மேம்படுத்தும் பணி நடந்து வருகிறது.
இதேபோன்று, மேலகொந்தையில் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் வனத்துறை இணைந்து தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் புதிய நாற்றங்கால் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இப்பணிகளை கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் நேரில் ஆய்வு செய்தார்.
நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் உத்தண்டி, உதவி கோட்ட பொறியாளர் தனராஜன், உதவி செயற்பொறியாளர் நித்யா, உதவி பொறியாளர்கள் வினோதினி, குமரன், பி.டி.ஓ.,க்கள் நாராயணன், சையத் உட்பட பலர் பங்கேற்றனர்.
