/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் நகரில் ரூ.5 கோடியில் சாலை மேம்பாடு பணிகள் தீவிரம்
/
விழுப்புரம் நகரில் ரூ.5 கோடியில் சாலை மேம்பாடு பணிகள் தீவிரம்
விழுப்புரம் நகரில் ரூ.5 கோடியில் சாலை மேம்பாடு பணிகள் தீவிரம்
விழுப்புரம் நகரில் ரூ.5 கோடியில் சாலை மேம்பாடு பணிகள் தீவிரம்
ADDED : மார் 16, 2025 11:27 PM

விழுப்புரம்; விழுப்புரம் நகரில், ரூ.5 கோடி மதிப்பீட்டில் சாலை மேம்பாடு பணி துவங்கியது.விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரில் அருகில் துவங்கி, புதிய பஸ் நிலையம் வழியாக காட்பாடி ரயில்வே மேம்பாலம் வரையிலான சாலையை மேம்படுத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக, மாநில நெடுஞ்சாலைத்துறை மூலம் ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி விழுப்புரம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 3.6 கி.மீ., துார சாலையில், இருபுறமும் தலா 10.5 மீட்டர் அகலத்திற்கு புதிதாக தார் சாலை அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகள் கடந்த சில தினங்களுக்கு முன், துவங்கி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இம்மாத இறுதிக்குள் பணிகள் நிறைவடையும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.