/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம்
/
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம்
ADDED : ஜன 09, 2025 06:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி: சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு விக்கிரவாண்டியில் விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
விக்கிரவாண்டி போக்குவரத்து போலீஸ் சார்பில் டோல்பிளாசாவில் நடந்த விழிப்புணர்வு பிரசாரத்திற்கு இன்ஸ்பெக்டர் வசந்த் தலைமை தாங்கி இரு சக்கர வாகன ஓட்டிகளிடம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை வழங்கினார்.
சப்-இன்ஸ்பெக்டர்கள் துரைராஜ், முத்துராஜ் ஆகியோர் சாலைபாதுகாப்பு கடைபிடிப்பது குறித்தும்,ெஹல்மெட் அவசியம் குறித்தும் பேசினர்.
டோல்பிளாசா துணை மேலாளர் சொர்ணமணி, பாதுகாப்பு மேலாளர் அசோக்குமார், பி.ஆர்.ஓ., தண்டபாணி மற்றும் போக்குவரத்து போலீசார் கலந்து கொண்டனர்.

