/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி கண்காணிப்பு அலுவலர் துவக்கி வைப்பு
/
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி கண்காணிப்பு அலுவலர் துவக்கி வைப்பு
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி கண்காணிப்பு அலுவலர் துவக்கி வைப்பு
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி கண்காணிப்பு அலுவலர் துவக்கி வைப்பு
ADDED : ஜன 23, 2025 05:38 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
விழுப்புரம் மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 1.1.2025 முதல் 31.1.2025 வரை 'தேசிய சாலைப் பாதுகாப்பு மாதம் அனுசரிக்கப்படுகிறது.
அதன்படி, நேற்று விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் 36-வது தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி போக்குவரத்துத்துறை, நெடுஞ்சாலைத்துறை, அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
கலெக்டர் பழனி தலைமை வகித்தார். அரசு முதன்மை செயலாளரான மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுன்சோங்கம் ஜடக் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அரசு துறைகள் சார்பில் வாகன விழிப்புணர்வு பேரணி மற்றும் தலை கவசத்துடன் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடந்தது. ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் தலைக்கவசம் உயிர்க்கவசம், சீட் பெல்ட் அணிவோம், மது அருந்தி வாகனம் ஓட்டாதீர், சாலை விதிகளை கடைபிடிப்போம் என்ற விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர்.
பெருந்திட்ட வளாகத்தில் தொடங்கிய பேரணி திருச்சி சாலை நான்குமுனை சந்திப்பு வரையும், இருசக்கர வாகன பேரணி ரயில் நிலையம் வரை சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்நிகழ்வில் எஸ்.பி., சரவணன், வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன், ஆய்வாளர்கள் பெரியசாமி, கோவிந்தராஜ், நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர்கள் உத்தண்டி, ஸ்ரீகாந்த், உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.