/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சுற்றித் திரியும் மாடுகள் : நடவடிக்கை எப்போது?
/
சுற்றித் திரியும் மாடுகள் : நடவடிக்கை எப்போது?
ADDED : அக் 31, 2025 02:28 AM

விழுப்புரம்:  விழுப்புரம் நகரில் முக்கிய சாலைகளில், மாடுகள் சுற்றித் திரிவதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
விழுப்புரம் புதிய பஸ் நிலையம் எதிரில் துவங்கி, நகரின் பல்வேறு முக்கிய சாலைகளில் கால்நடைகள் தினந்தோறும் சுற்றித் திரிகின்றன.
கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம், நேரு வீதி, சென்னை தேசிய நெடுஞ்சாலை, கிழக்கு பாண்டி ரோடு உள்ளிட்ட பகுதிகளில், மாடுகள் கட்டுப்பாடின்றி திரிவதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். இதனால், முக்கிய வீதிகளில் வாகன போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. விழுப்புரம் நகரில் சாலைகளில், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித் திரியும் மாடுகளை கட்டுப்படுத்திட நகராட்சி அலுவலகத்தில், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நகராட்சி நிர்வாகத்திடம் நகர் மன்ற கவுன்சிலர்கள் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இப்பிரச்னை குறித்து நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

