/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வழிப்பறி வாலிபர் குண்டாசில் கைது
/
வழிப்பறி வாலிபர் குண்டாசில் கைது
ADDED : மார் 02, 2026 03:39 AM

விழுப்புரம்: வழிப்பறி வாலிபரை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
அரகண்டநல்லுார் அருகே வசந்த கிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணி யான் மனைவி வாசுகி, 35; இவர் கணவருடன், கடந்த பிப்., 2ம் தேதி கண்டாச்சிபுரம் அடுத்த ஒட்டம்பட்டு கிராமம் அருகே ஆட்டோவில் காய்கறி விற்பனையில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, ஒட்டம்பட்டு கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் தினேஷ், 24; என்பவர், ஆட்டோவை வழிமறித்து, கண்ணியானிடம் இருந்த ரூ.5 ஆயிரம் ரொக்கம் மற்றும் மொபைலை பறித்து கொண்டு, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
அரகண்டநல்லுார் போலீசார் தினேைஷ கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவர் மீது அரகண்டநல்லுார் போலீஸ் ஸ்டேஷனில் வழிப்பறி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
இதையொட்டி, இவரின் செயலை தடுக்கும் வகையில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய எஸ்.பி., சாய் பிரனீத் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான் உத்தரவின் பேரில், நேற்று அரகண்டநல்லுார் போலீசார், தினேைஷ குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து, கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர்.

