/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரோபோடிக் மூலம் குப்பை அகற்ற செயல் வடிவம்
/
ரோபோடிக் மூலம் குப்பை அகற்ற செயல் வடிவம்
ADDED : ஜூலை 10, 2025 07:20 AM
விழுப்புரம் : குப்பை அள்ளுவதற்கு ரோபோடிக் பயன்படுத்த முதல்வர் ஸ்டாலின், செயல் வடிவம் அனுப்பியுள்ளதாக தமிழக துாய்மை பணியாளர்கள் நல வாரிய தலைவர் ஆறுச்சாமி பேசினார்.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
துாய்மை பணியாளர்களின் பணி அர்ப்பணிப்பு மிக்கது. கொரோனா காலத்தில் தங்கள் உயிரை துச்சமென எண்ணி லட்சக்கணக்கான உயிர்களை காத்தனர். அவர்கள் கோரிக்கைகளை நல வாரியத்தில் வழங்கினால், கலெக்டர் மூலம் தீர்வு காணப்படும்.
கடந்த ஆட்சியில் செயல்படாமல் இருந்த நலவாரியம், தி.மு.க., ஆட்சியில் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. தமிழக முதல்வர் ரூ. 15 கோடியை நலவாரியத்திற்கு வழங்கினார். துாய்மைப் பணியாளர்கள்
கட்டாயமாக நலவாரியத்தில் பதிவு செய்து அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ள வேண்டும். மாவட்ட நிர்வாகம் சார்பில், தனியாக குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்த வேண்டும்.
தமிழகத்தில் ரோபோடிக் மூலம் குப்பை அள்ளுவதற்கு முதல்வர் ஸ்டாலின் செயல் வடிவம் அனுப்பியுள்ளார். அத்திட்டம் நடைமுறைக்கு வந்தால் துாய்மைப் பணியாளர்களுக்கு மாற்று வேலை வழங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.