ADDED : ஜன 20, 2025 06:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: தீ விபத்தில் கூரை வீடு எரிந்து சேதமடைந்தது.
விழுப்புரம் அடுத்த கண்டம்பாக்கம் காலனியை சேர்ந்தவர் சீனுவாசன் மகன் மணிகண்டன், 37; கூலி தொழிலாளி. இவர், நேற்று காலை வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் தந்தை சீனுவாசன், பார்வை திறனற்ற மாற்று திறனாளி சகோதரர்கள் இருவர் இருந்துள்ளனர். நேற்று மாலை 5 மணிக்கு திடீரென கூரை வீடு தீப்பிடித்து எரிந்துள்ளது. அக்கம் பக்கத்தினர் வீட்டின் உள்ளே படுத்திருந்த சீனுவாசன் உள்ளிட்ட 3 பேரையும் மீட்டனர். தீ வேகமாக பரவி வீடு முழுவதும் எரிந்து சேதமடைந்தது. இதில், நகை, வீட்டு உபயோக பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
தகவலறிந்த விழுப்புரம் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் தடுத்தனர். தீ விபத்து குறித்து, விழுப்புரம் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.