/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திண்டிவனம் கல்லூரி சாலையில் ரவுண்டானா பணி துவங்கியது! சந்தைமேடு புறவழிச்சாலையில் விரைவில் போக்குவரத்து
/
திண்டிவனம் கல்லூரி சாலையில் ரவுண்டானா பணி துவங்கியது! சந்தைமேடு புறவழிச்சாலையில் விரைவில் போக்குவரத்து
திண்டிவனம் கல்லூரி சாலையில் ரவுண்டானா பணி துவங்கியது! சந்தைமேடு புறவழிச்சாலையில் விரைவில் போக்குவரத்து
திண்டிவனம் கல்லூரி சாலையில் ரவுண்டானா பணி துவங்கியது! சந்தைமேடு புறவழிச்சாலையில் விரைவில் போக்குவரத்து
ADDED : ஜன 22, 2024 12:46 AM
திண்டிவனம் : திண்டிவனம் - சந்தைமேடு புறவழிச்சாலை பணிகள் முடிவடைந்த நிலையில், பொது மக்களின் கோரிக்கையை ஏற்று, கல்லுாரி சாலையில் ரவுண்டானா அமைக்கும் பணி துவங்கியது.
திண்டிவனம் - கிருஷ்ணகிரி இடையிலான 178 கி.மீ., துாரத்திற்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில், 610 கோடி ரூபாய் செலவில் சாலை அமைக்கும் பணி நடபெற்றது.
இதில், திண்டிவனம் - கிருஷ்ணகிரி சாலை விரிவாக்கப் பணிகளில், திண்டிவனம், சந்தைமேடு, அய்யந்தோப்பு வழியாக சென்னை தேசிய நெடுஞ்சாலை வரையிலான 4.5 கி.மீ., துாரத்திற்கு புறவழிச்சாலை அமைக்கும் பணி நடந்தது.
சந்தைமேடு அடுத்த அய்யந்தோப்பு பகுதியில், அரசு கல்லுாரி செல்லும் சாலைப் பகுதியில் 200 மீட்டர் துாரத்திற்கு மட்டும் தார் சாலை அமைப்பதில் நீண்ட காலமாக சிக்கல் நீடித்தது.
கல்லுாரி செல்லும் சாலை போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த சாலை என்பதால், அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், கல்லுாரி செல்லும் சாலையில் சுரங்கப்பாதை கட்டித்தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதனால், புறவழிச்சாலையில் மற்ற பணிகள் முடிந்த நிலையில், கல்லுாரி செல்லும் சாலை மட்டும் மண் ரோடாக இருந்தது.
இந்நிலையில் பிரச்னை குறித்து கடந்த மாதம், திண்டிவனம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் சிவா தலைமையில், சமாதானக் கூட்டம் நடந்தது. அதில், சுரங்கப் பாதைக்கு பதிலாக கல்லுாரி சாலையில் ரவுண்டானா அமைக்கும் முடிவிற்கு, பொது மக்கள் சம்மதம் தெரிவித்தனர்.
அதன்பேரில் நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்து வந்த கல்லுாரி சாலையில், தற்போது ரவுண்டானா அமைக்கும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.
இதுபற்றி நகாய் அதிகாரிகள் தரப்பில் கேட்ட போது, 'நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்னைக்கு முடிவு காணும் வகையில், தற்போது கல்லுாரி சாலையில் ரவுண்டானா அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிந்த பிறகு, திண்டிவனம் - சந்தைமேடு புறவழிச்சாலை மக்கள் பயன்பாட்டிற்கு முறைப்படி திறந்துவிடப்படும்' என்றார்.
திண்டிவனத்தில் போக்குவரத்து நெரிசலை முற்றிலும் குறைக்கும் வகையிலும், வாகனங்கள் சிரமமின்றி திண்டிவனத்தைக் கடந்து செல்லும் வகையில், சந்தைமேடு புறவழிச்சாலையில், ரவுண்டானா பணிகளை விரைந்து நிறைவு செய்து, பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர நகாய் அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.