ADDED : பிப் 19, 2026 04:47 AM
அ நிறம் | அளவு
விழுப்புரம்: தி.மு.க., நிர்வாகியை மிரட்டிய ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் நரசிங்கபுரத்தை சேர்ந்தவர் ஆனந்தராஜ், 34; தி.மு.க., மாவட்ட தொண்டர் படை துணை அமைப்பாளர். இவர், கடந்த மாதம் தனது வீட்டின் அருகே வைத்திருந்த பேனரை அதே பகுதியை சேர்ந்த ரவுடி முகமது ஹனீப், 30; என்பவர் கிழித்தார். இதனால் ஏற்பட்ட தகராறின் முன்விரோதம் காரணமாக, கடந்த 17ம் சாலையில் நடந்து சென்ற ஆனந்தராஜை, முகமது ஹனீப் திட்டி மிரட்டினார்.
விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து முகமது ஹனீப்பை கைது செய்து விசாரிக்கின்றனர்.
