ADDED : ஏப் 21, 2025 04:46 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் ரவுடியை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோட்டை சேர்ந்தவர் இருசப்பன் மகன் அப்பு (எ) கலையரசன்,31; ரவுடி. கடந்த மார்ச் 20ம் தேதி இதே பகுதியை சேர்ந்த ஜான் அந்தோணி ராஜ் என்பவரை முன்விரோதம் காரணமாக கொலை செய்ய முயன்றார்.
விழுப்புரம் டவுன் போலீசார் கொலை முயற்சி வழக்குப் பதிந்து அப்புவை கைது செய்து, கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர்.
ரவுடி அப்பு மீது டவுன் போலீஸ் ஸ்டேஷனில் கொலை முயற்சி, தகராறு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
அப்புவின் நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய எஸ்.பி., சரவணன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் உத்தரவின் பேரில், ரவுடி அப்பு (எ) கலையரசனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீஸ் கைது செய்ததற்கான உத்தரவை, கடலுார் மத்திய சிறை அதிகாரிகளிடம் வழங்கினர்.

