தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மீன் வியாபாரியிடம் ரூ.1 லட்சம் பறிமுதல்

 மீன் வியாபாரியிடம் ரூ.1 லட்சம் பறிமுதல்

 மீன் வியாபாரியிடம் ரூ.1 லட்சம் பறிமுதல்


ADDED : மார் 21, 2026 05:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 21, 2026 05:04 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மயிலம்: தேர்தல் பறக்கும் படையினர் கூட்டேரிபட்டில் நடத்திய வாகன சோதனையில் மீன் வியாபாரியிடம் இருந்து ஒரு லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை கூட்டேரிப்பட்டில் தேர்தல் பறக்கும் படை குழு அலுவலர் பி.டி.ஓ., மோகனா தலைமையில் போலீசார் கொண்ட குழுவினர் நேற்று மாலை 4:00 மணிக்கு தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, மயிலம் பகுதியில் இருந்தது வந்த பைக்கை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், ஆவணம் இன்றி ஒரு லட்சம் ரூபாய் கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. விசாரணையில், பெரும்பாக்கம் அடுத்த குன்னம் கிராமத்தைச் சேர்ந்த தேசிங்கன் மகன் பாபு, 38; என்பதும் மீன் வியாபாரி என்பதும் தெரிந்தது.

அதனைத் தொடர்ந்து, பணத்தை பறிமுதல் செய்து, மயிலம் சட்டசபை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் காதர் அலி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஏழுமலை ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us