/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கோட்டக்குப்பத்தில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 1.73 லட்சம் திருட்டு
/
கோட்டக்குப்பத்தில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 1.73 லட்சம் திருட்டு
கோட்டக்குப்பத்தில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 1.73 லட்சம் திருட்டு
கோட்டக்குப்பத்தில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 1.73 லட்சம் திருட்டு
ADDED : ஏப் 11, 2025 06:16 AM

கோட்டக்குப்பம்: கோட்டக்குப்பத்தில் வீட்டின் பூட்டை உடைத்து ஒரு லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரியக்கோட்டக்குப்பம் தந்திராயன்குப்பம் சந்திப்பில் உள்ள பழைய பட்டினப்பாதையை சேர்ந்தவர் வரதன் மகன் கார்த்திக், 26; டாடா ஏஸ் டிரைவர். இவரது மனைவி ரெஜினா பேகம். இவர்களுடன் வீட்டில், 10 வயது மகள் ஆபியா, தந்தை வரதன், தாய் டில்லிமா மற்றும் தங்கை பவித்ரா ஆகியோர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் கார்த்திக் உறவினர் வெங்கடேசன் இல்ல திருமண நிகழ்ச்சிக்கு கடந்த 8ம் தேதி குடும்பத்தோடு வெளியூர் சென்றிருந்தனர். திருமண நிகழ்ச்சி முடித்துவிட்டு நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வந்து பார்த்த போது, கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் அறைக்குள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்து ரூ. ஒரு லட்சத்து 73 ஆயிரம் திருட்டுப் போயிருந்தது. இந்த பணம் தீபாவளி பண்டிகை சீட்டுக்காக பொது மக்களிடம் வசூலித்த பணம் என கூறப்படுகிறது. இது குறித்து கார்த்திக் கோட்டக்குப்பம் போலீசில் புகார் அளித்தார்.
அதன் பேரில் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன், திருட்டு நடந்த வீட்டை பார்வையிட்டு அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களிடம் விசாரணை மேற்கொண்டார். இந்த சம்பவம் குறித்து கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

