/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மயிலம் ஒன்றிய பணிகளுக்கு ரூ.1.81 கோடி நிதி ஒதுக்கீடு
/
மயிலம் ஒன்றிய பணிகளுக்கு ரூ.1.81 கோடி நிதி ஒதுக்கீடு
மயிலம் ஒன்றிய பணிகளுக்கு ரூ.1.81 கோடி நிதி ஒதுக்கீடு
மயிலம் ஒன்றிய பணிகளுக்கு ரூ.1.81 கோடி நிதி ஒதுக்கீடு
ADDED : டிச 06, 2024 04:55 AM
மயிலம் : மயிலம் ஒன்றிய கூட்டத்தில் ஒரு கோடியே 81 லட்சம் ரூபாய் செலவில் வளர்ச்சி பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மயிலம் ஒன்றிய கூட்டம் சேர்மன் யோகேஸ்வரி மணிமாறன் தலைமையில் நடந்தது.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிலம்புச்செல்வன், ராமதாஸ் முன்னிலை வகித்தனர். துணைச் சேர்மன் புனித ராமஜெயம் வரவேற்றார்.
துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கவுன்சிலர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், மயிலம் ஒன்றியத்தில் உள்ள 47 கிராம ஊராட்சிகளுக்கு குடிநீர், சாலை வசதி, சுகாதாரம், பாலம் மேம்பாட்டுப் பணிகளுக்காக 1 கோடியே 81 லட்சம் ரூபாய் செலவில் திட்ட பணிகள நிறைவேற்றப்பட ஒப்புதல் வழங்குவது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.