/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரூ. 2 கோடியில் நரி ஆறு சீரமைப்பு பணி தீவிரம்
/
ரூ. 2 கோடியில் நரி ஆறு சீரமைப்பு பணி தீவிரம்
ADDED : ஜூலை 10, 2025 07:39 AM

விழுப்புரம் : விழுப்புரம் அருகே ஆக்கிரமிப்பில் இருந்த நரி ஆற்றில், ரூ. 2 கோடியில் துார்வாரும் பணி நடந்து வருகிறது.
விழுப்புரம் அடுத்த தளவானுார் அருகே மலட்டாற்றின் இருந்து பிரிந்து 13 கி.மீ., துாரத்திற்கு நரி ஆறு செல்கிறது.
இது பில்லுார், ஆனாங்கூர், பஞ்சமாதேவி, சிறுவந்தாடு வழியாக, 50க்கும் மேற்பட்ட கிராமங்களின் ஏரிகளை நிரப்பவும், குடிநீர் ஆதாரமாகவும் இருக்கிறது.
இந்நிலையில், நரி ஆற்றின் நீர் வழிப்பாதை முழுவதுமாக ஆக்கிரமிக்கப்பட்டு, பயிர் சாகுடி செய்யப்பட்டு வருகிறது. இதனால், அந்த ஆறு இருந்த இடமே தெரியாமல் மறைந்து போனதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வந்தனர்.
வில்லியனுார், சிறுவந்தாடு உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராம ஏரிகளுக்கு நீரை கொண்டு செல்ல முடியாத நிலை இருந்தது.
இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கலெக்டர் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலகங்களில் விவசாயிகள், பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
இதையடுத்து பொதுப்பணித்துறை மூலம் நரி ஆற்றை சீரமைக்க 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
இதற்கான பணிகள் தற்போது துவங்கப்பட்டுள்ளது.
இந்த ஆறு பொக்லைன் இயந்திரம் மூலம் துார்வாரப்பட்டு, கரைகள் அமைக்கும் பணிகள் தற்போது நடந்து வருகிறது.
இதுவரை 30 சதவீத பணிகள் முடிந்துள்ளது. மேலும், இந்த ஆற்றின் எல்லைகள் தொடர்பாக அளவீடு செய்து, கல் பதித்துள்ளனர்.
ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கி அகற்றுவதற்கான பணிகள் விரைவில் துவங்கப்படும் என அலுவலர்கள் கூறினர்.