ADDED : ஏப் 03, 2026 06:06 AM

வானுார்: வானுார் அருகே பைக்கில் உரிய ஆவணமின்றி எடுத்து வரப்பட்ட 2 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படை குழுவினர் பறிமுதல் செய்தனர்.
வானுார் சட்டசபை தொகுதிக்குட்பட்ட வழுதாவூர் சாலையில் நேற்று தேர்தல் பறக்கும் படை குழுவினர் வேளாண்மை உதவி இயக்குநர் எத்திராஜ் தலைமையில் வாகன சோதனையில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த டி.வி.எஸ்., ஜூபிடர் பைக்கை நிறுத்தி சோதனை செய்தனர்.
பைக்கில் 2 லட்சம் ரூபாய் கொண்டு வந்தது தெரியவந்தது. விசாரணையில் பைக்கில் வந்தவர் பெரிய பாபுசமுத்திரம், குயிலாப்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கலியபெருமாள் என்பதும், கான்ட்ராக்டரான அவர், தனது வேலைக்காக பணதை்தை பெற்று வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அதிகாரிகள், உரிய ஆவணங்கள் இல்லாததால் அவரிடம் இருந்த 2 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்து, தேர்தல் நடத்தும் உதவி அலுவலரான வானுார் தாசில்தார் வித்யாதரனிடம் ஒப்படைத்தனர்.
